பள்ளி படிக்கும்போதே நான் அப்படி.. நடிகர் ஜீவா பற்றி இந்த விஷயம் எல்லாம் தெரியுமா
நடிகர் ஜீவாவை பற்றி அதிகம் உங்களுக்கு தெரியாத விஷயங்கள் இதோ
நிஜ பெயர், குடும்பம்
நடிகர் ஜீவாவின் நிஜ பெயர் அமர் சவுத்ரி. அவரது அப்பா ஆர்.பி. சவுத்ரி ஒரு பெரிய தயாரிப்பாளர். அப்பா ராஜஸ்தானை சேர்ந்தவர், அம்மா தமிழ்.
அவர் அப்பா சினிமாவில் இருக்கிறார் என்பதால் ஜீவாவுக்கு முதல் வாய்ப்பு எளிதில் கிடைத்து இருக்கலாம், ஆனால் அவர் தற்போது வரை சினிமாவில் நிலைத்திருக்க காரணம் அவரது நடிப்பு மட்டும் தான். இருந்தாலும் சமீப காலமாக அவர் பெரிய ஹிட் கொடுக்கமுடியாமல் மல்டிஸ்டாரர் படங்களில் தான் தலையை காட்டி வருகிறார்.
ஜீவாவின் சகோதரர் ஜித்தன் ரமேஷும் நடிகராக தான் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பள்ளியிலேயே அப்படி..
பள்ளிக்கூடத்தில் இருக்கும் ரூல்ஸை மீறி ஜீவா எப்போதும் ஃபுல் ஸ்லீவ் சட்டை தான் அணிந்து செல்வாராம். நீளமான முடி, அப்பாவின் perfume என எப்போதும் ரகளை செய்து ரூல்ஸை மீறும் பையன் தான் ஜீவா.
கிரிக்கெட்
நடிகர் ஜீவா கிரிக்கெட் மீது அதிகம் ஆர்வம் கொண்டவர். அவர் சிசிஎல் என்ற நடிகர்கள் கிரிக்கெட் போட்டிகளில் ஆடி இருக்கிறார்.
அதில் அவரது ஆட்டத்தை பார்த்துவிட்டு தான் 83 படத்தில் நடிக்க அழைத்து இருக்கிறார்கள்.
காதல் திருமணம்
ஜீவா காதல் திருமணம் தான் செய்துகொண்டார். அவர் 6ம் வகுப்பு படிக்கும்போது தான் சுப்ரியாவை சந்தித்தார். அவர்கள் அப்போது இருந்தே நண்பர்கள் ஆக, அதன் பின் காதலர்களாக மாறி திருமணமும் செய்துகொண்டனர்.
நீதானே என் பொன்வசந்தம் படத்தில் வரும் பாதி காட்சிகள் என் வாழ்க்கையிலும் நடந்தது என ஜீவா ஒரு பேட்டியில் தெரிவித்து இருப்பார்.
தற்போது ஜீவா - சுப்ரியா ஜோடிக்கு 12 வயதில் ஒரு மகன் இருக்கிறார்.
பயம்
ஜீவாவுக்கு உயரத்தை பார்த்தாலே பயமாம். அவருக்கு acrophobia இருக்கிறது என அவரே தெரிவித்து இருக்கிறார்.
குங்ப்பூ
நடிகர் ஜீவா ஒரு படத்திற்காக மூன்று வருடங்கள் குங்பூ கற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read: வாடகை கொடுக்க கூட பணமில்லை.. கதறி அழுது வீடியோ வெளியிட்ட கூல் சுரேஷ்

பெற்றோரையே வீட்டில் சேர்க்காத விஜய்; அவரது சுபாவமே அதுதான் - நெப்போலியன் கடும் விமர்சனம் News Lankasri

கட்டிப்பிடித்ததால் ரூ.3.73 லட்சம் கழிச்சுக்கலாம்; திருமணத்தை நிறுத்திய பெண் - இளைஞர் ஷாக்! IBC Tamilnadu

வயிற்றுல அடிச்சாங்க.. பாதிக்கப்பட்ட ஜாய் கிறிஸ்டா மகன் - கசிந்த குரல் பதிவுக்கு கிளம்பும் விமர்சனம் Manithan

கிட்னிகள் ஜாக்கிரதை பேட்ஜை அணிந்து வந்த அதிமுக எம்எல்ஏக்கள் - சட்டமன்றத்தில் சலசலப்பு! IBC Tamilnadu
