நடிகர் எம்.ஜி.ஆர் பற்றி பலருக்கும் தெரியாத விஷயங்கள்.. Facts About MGR
எம்.ஜி. ராமசந்திரன் தமிழ் சினிமாவில் புரட்சி தலைவர் என கோடானகோடி ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர், ஏன் கொண்டாடப்பட்டு வருபவர் எம்.ஜி.ஆர் எனும் மருதூர் கோபாலன் ராமச்சந்திரன். இவர் தமிழ் சினிமாவில் 1936ல் வெளிவந்த சதி லீலாவதி படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.
இதன்பின் ஹீரோவாக நடிக்க துவங்கிய எம்.ஜி.ஆர் காலம்கடந்து நிலைத்து நிற்கும் சூப்பர்ஹிட் படங்களை கொடுத்தார். ஆயிரத்தில் ஒருவன், நம் நாடு, எங்க வீட்டு பிள்ளை, படகோட்டி, அடிமைப்பெண் என பல படங்களை சொல்லிக்கொண்டே போகலாம். நடிகராக மட்டுமல்லாமல் அரசியலிலும் களமிறங்கி தனது ஆளுமையை நிரூபித்தார்.
இந்நிலையில், நடிகரும் அரசியல்வாதியுமான எம்.ஜி.ஆர் அரசியல்வாதியுமான எம்.ஜி.ஆர் அவர்கள் குறித்து பலருக்கும் தெரியாத விஷயங்கள் குறித்து தான் இந்த பதிவில் பார்க்கவிருக்கிறோம்..
Facts About MGR
1. எம்.ஜி.ஆர் நடிகராக மாறியதே ஒரு விபத்து தான். ஆம், பள்ளியில் நன்றாக படித்த வந்த எம்.ஜி.ஆர் வறுமையின் காரணமாக பள்ளியில் இருந்து வெளியேறியுள்ளார். அதன்பின், தனது அண்ணனும், தம்பியும் நன்றாக படிக்க வேண்டும் என்பதற்காக தான் நாடக சபாவில் இணைந்துள்ளார். முதலில் நாடக சபாவில் வெவேறு வேலைகள் செய்துகொண்டிருந்த எம்.ஜி.ஆருக்கு சில நாட்களுக்கு பின்பு வேஷம் கட்டுவதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
2. நடிகர் எம்.ஜி.ஆர் தன்னுடைய எந்த ஒரு படத்தில் மது அருந்துவது போன்ற காட்சியிலும், சிகரெட் பிடிப்பது போன்ற காட்சியிலும் நடித்ததே இல்லை.
3. பல குழந்தைகள் பள்ளி செல்ல முக்கியமான காரணமாக இருந்தவரும் எம்.ஜி.ஆர் தானாம். ஏனென்றால், அவருடைய ஆட்சி காலட்டத்தில் மத்திய உணவு திட்டத்தை கொண்டு வந்த அணைத்து அரசாங்க பள்ளியிலும் இலவச உணவை வழங்கினார். இதன்முலம் பல குழந்தைகள் உணவுக்காக பள்ளியில் படிக்க சென்றார்கள்.
4. தனது கடைசி காலகட்டம் வரை உடற் பயிற்சிக்கு முக்கிய துவம் கொடுத்தவர் எம்.ஜி.ஆர். படப்பிடிப்பு எத்தனை மணிக்கு முடிந்தாலும், கிடைக்கும் நேரத்தில் உறங்கிவிட்டு, காலை 5 மணிக்கு எழுந்துவிடுவாராம். 5 மணிக்கு மேல் கண்டிப்பாக உடற் பயிற்சி செய்வதை தனது வாழ்க்கை முறையாக வெய்துகொண்டுள்ளார் எம்.ஜி.ஆர்.
5. நடிகர் எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்த உணவு மீன் தானாம். அதே போல் அவருக்கு மிகவும் பிடிக்காத விஷயம் விமான பயணம் என்று கூறப்படுகிறது.