நடிகர் சத்யராஜ் பற்றி பலருக்கும் தெரியாத விஷயங்கள்.. Facts About Sathyaraj
நடிகர் சத்யராஜ்
எந்த ஒரு கதாபாத்திரம் கொடுத்தாலும் அதே கதாபாத்திரமாக திரையில் வாழக்கூடியவர் நடிகர் சத்யராஜ். அதிலும் குறிப்பாக வில்லன் கதாபாத்திரம் என்றால் சொல்லவே தேவையில்லை. அந்த அளவிற்கு வெறித்தனமாக நடிப்பார்.
இவர் நடிப்பில் வெளிவந்த அமைதிப்படை, நடிகன், கடலோர கவிதைகள் என பல படங்கள் மக்கள் மனதில் இன்றும் நீங்காமல் இடம் பிடித்துள்ளது. இவர் நடிப்பில் அடுத்ததாக பிரின்ஸ் திரைப்படம் வெளியாகவுள்ளது.
நடிகர் சத்யராஜ் பற்றி தமிழ் சினிமா ரசிகர்கள் பலருக்கும் தெரியாத சுவாரஸ்யமான விஷயங்கள் குறித்து பார்க்கவிருக்கும் பதிவு தான் இது..
Facts About Sathyaraj
1. சுப்பய்யா மற்றும் நாதாம் பால் தம்பதிக்கு பிறந்தவர் தான் நடிகர் சத்யராஜ். இவருடைய இயற் பெயர் ரங்கராஜன்.
2. இன்று பல லட்சங்கள் சம்பளமாக வாங்கி கொண்டிருக்கும் நடிகர் சத்யராஜ், முதன் முதலில் தான் நடித்த நாடகத்திற்காக ரூ. 10 சம்பளமாக வாங்கியுள்ளார்.
3. 1985ஆம் ஆண்டு பல மொழிகளில் 27 படங்கள் நடித்துள்ளார். ஒரே வருடத்தில் அதிக படங்களை நடித்த ஒரே நடிகரும் சத்யராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.
4. சத்யராஜ் நடித்து வெளிவந்த சிறந்த திரைப்படங்களில் ஒன்று பெரியார். 2007ஆம் ஆண்டு வெளிவந்த இப்படம் இன்று வரை கல்ட் ஃபிலிமாக பார்க்கப்படுகிறது. இப்படத்தில் சம்பளமே வாங்காமல் நடித்துள்ளாராம் சத்யராஜ்.
5. சத்யராஜ் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கு அப்பாவாக நடித்த திரைப்படம் மிஸ்டர் பாரத். இப்படத்தில் ரஜினியின் தந்தையாக நடிக்கும் பொழுது சத்யராஜுக்கு 31 வயது தானாம். ஆனால், சத்யராஜின் மகனாக நடித்திருந்த ரஜினிக்கு 35 வயதாம். தனது இளம் வயதில் இருந்தே படத்தை ஹீரோவ கதாபாத்திரத்தில் மட்டுமே நடிக்காமல் படத்தில் முக்கியத்துவும் உள்ள கதாபாத்திரத்தில் தேர்ந்தெடுத்து நடித்துள்ளார்.

முக்கிய கட்டத்தில் உக்ரைனை கைவிடும் பிரித்தானியா: புடினுக்கு கோபமூட்டும் செயல் என அச்சம் News Lankasri

பல முறை கெஞ்சிய தாயார்... திருப்பி அனுப்பிய மருத்துவமனை: நொறுங்கிப்போன பிரித்தானிய குடும்பம் News Lankasri

என் கணவர் இவரை மாதிரிதான் இருக்க வேண்டும்... - மனம் திறந்த கீர்த்தி சுரேஷ்... - ஷாக்கான ரசிகர்கள்..! IBC Tamilnadu
