விவாகரத்து முதல் 'நடிப்பை நிறுத்தும் முடிவு' வரை.. சித்தார்த் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்
நடிகர் சித்தார்த் பற்றி நீங்கள் அதிகம் அறியாத தகவல்கள் இதோ
மணிரத்னம் அசிஸ்டன்ட்
பிஸ்னஸ் மேனேஜ்மென்ட் படிப்பை முடித்தபிறகு சித்தார்த் முதலில் இயக்குனர் மணிரத்னத்திடம் அசிஸ்டன்ட் ஆக 21 வயதில் சேர்ந்தார். அவர் கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் அசிஸ்டன்ட் ஆக பணியாற்றிய போது தான் அவருக்கு ஷங்கரின் பாய்ஸ் படத்தின் ஆடிஷனில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.
ஆரம்பத்தில் ஷங்கருக்கு அசிஸ்டன்ட் ஆக பணியாற்றி இருந்தாலும் அதன் பின் அவரது ஆயுத எழுத்து படத்தில் நடிக்கும் வாய்ப்பும் சித்தார்த்துக்கு கிடைத்தது.
விவாகரத்து
சித்தார்த் ஏற்கனவே திருமணம் முடிந்து அதன் பின் சில காரணங்களால் விவாகரத்தும் செய்துவிட்டார். ஆனால் அவரது முன்னாள் மனைவி மேக்னா பற்றி அதிக விவரங்கள் எதுவும் வெளிவரவில்லை.
நடிகைகள் உடன் காதல்
சித்தார்த் இதற்கு முன் பல நடிகைகள் உடன் காதல் கிசுகிசுக்களில் சிக்கி இருக்கிறார். குறிப்பாக அவர் சமந்தா உடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்ததாக அப்போது கிசுகிசுக்கப்பட்டது. சமந்தாவும் அந்த காதலில் இருந்து வெளியில் வந்து தான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் த்ரிஷா, ஸ்ருதி ஹாசன் உடனும் சித்தார்த் காதலில் இருந்ததாகவும் கிசுகிசுக்கள் வந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம்.
சர்ச்சைகள்
சித்தார்த் எப்போதும் சமூக வலைத்தளங்களில் அவரது கருத்துகளை தைரியமாக சொல்ல கூடியவர். சில நேரங்களில் அதுவே அவரை பெரிய சர்ச்சைகளில் சிக்க வைத்து இருக்கிறது. அவர் சாய்னா நேவால் பற்றி ட்விட் போட்டு சில மாதங்களுக்கு முன்பு சர்ச்சையில் சிக்கிக்கொண்டார். அதற்காக அவர் மன்னிப்பு கேட்டதும் குறிப்பிடத்தக்கது.
நடிப்பதை நிறுத்திவிடுவேன்
எனக்கு நடிப்பதற்கு வித்யாசமான ரோல்கள் வேண்டும், இல்லை என்றால் நான் நடிப்பதை நிறுத்திவிட்டு வேறு வேலைக்கு சென்றுவிடுவேன் என சித்தார்த் கூறி இருக்கிறார்.
அதனால் தான் அவர் சமீப காலமாக திரைப்படங்களில் நடிக்காமல் இருக்கிறார் போல.
Also Read: வாடகை கொடுக்க கூட பணமில்லை.. கதறி அழுது வீடியோ வெளியிட்ட கூல் சுரேஷ்

மகனின் உயிர் பிரிந்த நேரத்தில் மருத்துவ ஊழியர்களின் அருவருப்பான செயல்., பெற்றோர் வேதனை News Lankasri

நேட்டோவில் இணைந்தால்.., இந்த இரு ஐரோப்பிய நாடுகள் எங்கள் இலக்காக மாறும்! ரஷ்யா கடும் எச்சரிக்கை News Lankasri
