துணிவு படத்தில் இருந்து விலகிய முக்கிய டெக்னீசியன்! ஷூட்டிங்கில் ஏற்பட்ட வாக்குவதாம்
துணிவு
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான நடிகர் அஜித் இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் துணிவு திரைப்படத்தில் நடித்து வந்தார்.
பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இப்படத்தின் ஷூட்டிங் திடீரென நிறுத்தப்பட்டது. இதனால் நடிகர் அஜித்தும் வெளி மாநிலங்களுக்கு பைக் ரெய்டு சென்றிருந்தார்.
இந்நிலையில் இப்படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் மீண்டும் துவங்கியுள்ளது, இதற்காக படக்குழு Bangkok சென்றுள்ளனர். அதன்படி அஜித் மற்றும் மஞ்சு வாரியர் விமான நிலையத்தில் Bangkok செல்லும் போது எடுக்கப்பட்ட வீடியோ பரவி வந்தன.

விலகிய முக்கிய டெக்னீசியன்
மேலும் தற்போது துணிவு படத்திலிருந்து திலிப் சுப்பராயன் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் படப்பிடிப்பில் இயக்குநர் வினோத் மற்றும் திலிப் சுப்பராயன் இடையே வாக்குவதாம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.
இதன் காரணமாகவே அவர் இப்படத்தில் இருந்து விலகும் நிலை ஏற்பட்டுள்ளதாம். மேலும் துணிவு படத்தில் பணியாற்றி வந்த ஆர்ட் டைரக்டர்-ம் விலகிவிட்டதாக மூத்த பத்திரிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வலிமை திரைப்படத்தில் வந்த ஸ்டண்ட் காட்சிகள் பெரியளவில் பேசப்பட்டது அதற்கு முக்கிய காரணமே திலிப் சுப்பராயன் என்பது குறிப்பிடத்தக்கது.

47 வயதில் குழந்தை பெற்றெடுத்த நடிகை ரேவதியின் ஒரே மகளை பார்த்துள்ளீர்களா
Heart Attack: மாரடைப்பின் போது உயிரைக் காப்பாற்ற உதவும் முதலுதவி பற்றி உங்களுக்கு தெரியுமா? Manithan
வெடிபொருட்கள் இல்லை... RAF ஃபேர்ஃபோர்டுக்கு அருகில் மூன்று வாகனங்கள் தொடர்பில் பொலிசார் News Lankasri