அச்சு அசல் மருதநாயகம் கமல் போலவே மாறிய ரசிகர்.. அனைவரும் ஆச்சரியப்பட வைத்த வீடியோ
கமல் ஹாசன்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் உலகநாயகன் கமல் ஹாசன். இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்தது விக்ரம் திரைப்படம்.
இப்படத்தை தொடர்ந்து இந்தியன் 2 திரைப்படம் கமல் நடிப்பில் உருவாகி வருகிறது. 2023ல் அதிகம் எதிர்பார்க்கப்படும் தமிழ் படங்களில் இதுவும் ஒன்றாகும். அடுத்ததாக எச். வினோத், மணி ரத்னம் என செம மாஸ் லைன் அப் வைத்துள்ளார் கமல்.

இயக்குனராக கமல் ஹாசன் எடுக்க நினைத்து இன்று வரை எடுக்க முடியாமல் பாதியிலேயே நிற்கும் திரைப்படம் தான் மருதநாயகம்.
இப்படம் கண்டிப்பாக விரைவில் எடுக்கப்படும் என பேட்டிகளில் கமல் கூறி வருகிறார். ஆனால், அதற்கான வேலைகள் நடப்பதாக தெரியவில்லை.
ஆச்சரியப்பட வைத்த வீடியோ
இந்நிலையில், மருதநாயகம் படத்தில் வரும் கமல் ஹாசன் போலவே வேடமிட்டு ரசிகர் ஒருவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோ இதோ..
Just tried makeup transformation to my Guru @ikamalhaasan ‘s Maruthanayagam getup #KamalHaasan? #kamalhasan @ArmyKamalhasan @kamalfansclub @RKFI @Dir_Lokesh pic.twitter.com/ShAwo3b2zD
— Sreejith Damodaran (@ZEXAXCYVMEhyVJ3) May 28, 2023
ஜெயிலர் அப்டேட் கொடுத்த நடிகை தமன்னா.. புகைப்படத்தை பார்த்து செம குஷியில் ரசிகர்கள்