அச்சு அசல் சூர்யா போல் மாறிய நபர்.. அதுவும் இந்த மிரட்டலான லுக்கில்
நடிகர் சூர்யா
சூர்யா தற்போது பிஸியாக கங்குவா படத்தில் நடித்து வருகிறார். சிறுத்தை சிவா இயக்கி வரும் இப்படத்தில் திஷா பாட்னி கதாநாயகியாக நடிக்கிறார்.
மேலும் மிருணாள் தாகூர் படத்தில் இடம்பெறும் வரலாற்று காட்சியில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மையான தகவல் என தெரியவில்லை.
சூர்யாவின் நடிப்பில் கடைசியாக திரைக்கு வந்த திரைப்படம் எதற்கும் துணிந்தவன். இப்படத்திற்கு பின் இவர் ஹீரோவாக நடிக்கவில்லை என்றாலும், கேமியோ ரோலில் வில்லனாக வந்து மிரட்டிய படம் தான் விக்ரம்.
வெறும் 10 நிமிடங்கள் மட்டுமே படத்தில் தோன்றி செம மாஸ் காட்டிவிட்டார். இதனால் இவர் நடித்த ரோலக்ஸ் எனும் கதாபாத்திரத்தின் மீது எக்கச்சக்கமான எதிர்பார்ப்பை ரசிகர்கள் வைத்துள்ளனர்.
சூர்யா போல் மாறிய நபர்
அடுத்ததாக எப்போது இந்த ரோலக்ஸ் கதாபாத்திரத்தை திரையில் பார்க்க போகிறோம் என்று காத்துக்கொண்டு இருக்கிறார்கள்.
இந்நிலையில், நபர் ஒருவர் நடிகர் சூர்யா ரோலக்ஸ் கெட்டப்பில் எப்படி இருந்தாரோ அதே போல மேக்கப் போட்டு தன்னை மாற்றிக் கொண்டுள்ளார். அச்சு அசல் பார்பதற்கு அப்படியே சூர்யா போலவே தோற்றமளிக்கிறார்.
இதோ அந்த வீடியோ..
Just tried makeup transformation to @Suriya_offl from #Vikram @Dir_Lokesh #suriya #suriyafans pic.twitter.com/DZjlTP3h9X
— Sreejith Damodaran (@ZEXAXCYVMEhyVJ3) May 18, 2023
வில்லன் மாமனாரிடம் பொங்கிய ஜீவா.. பாண்டியன் ஸ்டோர்ஸ் லேட்டஸ்ட் ப்ரோமோ

செங்கடலில் ஹூவுதி படையினர் தாக்குதல்: கடலில் மூழ்கிய சரக்கு கப்பல்: கடத்தப்பட்ட ஊழியர்கள் News Lankasri

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri

வைகோ உயிரை 3 முறை காப்பாற்றினேன்; மகனுக்காக எனக்கு துரோகி பட்டம் - மல்லை சத்யா குற்றச்சாட்டு IBC Tamilnadu
