முத்தத்தால் கமல்ஹாசனை உருவாக்கிய அவரின் தீவிர ரசிகர்- வைரலாகும் போட்டோ
கமல்ஹாசன்
உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களின் பிறந்தநாள் வரும் நவம்பர் 7ம் தேதி கொண்டாட உள்ளது. அவரது பிறந்தநாள் கொண்டாட்டங்கள் இப்போதே களைகட்ட தொட்ங்கியுள்ளது.
அவரின் பிறந்தநாள் அன்று இந்தியன் 3, கமல்ஹாசன் 234 மற்றும் கல்கி ஆகிய படங்களில் அப்டேட்டுகளும் வரும் என எதிர்ப்பார்ப்படுகிறது.
இந்த நிலையில் தான் கமல்ஹாசன் பிறந்தநாளுக்கு ரசிகர் ஒருவர் ஸ்பெஷலாக உருவாக்கிய பரிசு குறித்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.

ரசிகரின் பரிசு
கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் UMT ராஜா. தங்க நகை வடிவமைப்பாளரான இவர் நடிகர் கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு லிப்ஸ்டிப் பூசி முத்தமிட்டே நடிகர் கமல்ஹாசனின் முகத்தை உருவாக்கி அசத்தி உள்ளார்.
சுமார் 8 மணி நேரம் செலவளித்து இதனை உருவாக்கி இருப்பதாகவும், வருகின்ற நவம்பர் 7ம் தேதி கமலஹாசனின் பிறந்தநாளில் அவரை சந்தித்து இதனை அளிக்க விரும்புவதாக தெரிவித்தார்.
