இந்தியன் 2 படக்குழுவினருடன் கிராம மக்கள் சண்டை.. வெளியான பரபரப்பு தகவல்
தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குனராக இருப்பவர் தான் ஷங்கர். இவர் இயக்கத்தில் உலக நாயகன் கமல் ஹாசன் நடிப்பில் இந்தியன் 2 உருவாகி வருகிறது.
இப்படத்தில் ஒரு நட்சத்திரம் பட்டாளமே நடித்துவருகின்றனர். அதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து கொண்டே இருக்கிறது.
தற்போது இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு செங்கல்பட்டு மாவட்டத்தில் நடந்து வருகிறது. கல்பாக்கம் அருகில் இருக்கும் ஒரு கோட்டையில் ஷூட்டிங் நடந்து வந்தது.

சண்டை
ஷூட்டிங் நடந்த இடத்தில் இருந்த கிராம மக்கள் சிலர் படக்குழுவினரிடம் நன்கொடை கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் சலசலப்பு ஏற்பட்டது.
இதையடுத்து படக்குழுவினர் போலீசாருக்கு புகார் கொடுத்துள்ளனர். அப்போது போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று கிராம மக்களை எச்சரித்து அங்கிருந்து அனுப்பியுள்ளனர் .

கண்கலங்க வைக்கும் பவர் ஸ்டாரின் நிஜ வாழ்க்கை.. இவ்ளோ கஷ்டங்களா !