9 நாட்களில் கட்டா குஸ்தி 2 திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
கட்டா குஸ்தி 2
கடந்த வாரம் திரைக்கு வந்து பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பி வரும் திரைப்படம்தான் கட்டா குஸ்தி 2. இயக்குநர் செல்லா அய்யாவு இயக்கத்தில் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில் உருவாகி வெளிவந்த இப்படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இப்படத்தில் முனீஸ்காந்த், மோக்ஷா, சாரா, காளி வெங்கட், ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடித்திருந்தனர். ஷான் ரோல்டன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். எதிர்பார்ப்புடன் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.
வசூல்
கட்டா குஸ்தி 2 திரைப்படத்தின் வசூல் குறித்து தொடர்ந்து முதல் நாளிலிருந்தே பார்த்து வருகிறோம். அந்த வகையில் தற்போது 9 நாட்களில் இப்படம் உலகளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, 9 நாட்களில் கட்டா குஸ்தி 2 திரைப்படம் உலகளவில் ரூ. 37 கோடி வரை வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்யும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
சனி வக்ர பெயர்ச்சி 2026: ஜூலை 27 முதல் இந்த ராசிகளின் வாழ்க்கையில் ஏற்படப்போகும் பாரிய மாற்றம்! Manithan