விஜய்யுடன் இணைவது குறித்து கௌதம் மேனன் சொன்ன தகவல்- இப்போதே எதிர்ப்பார்க்கும் ரசிகர்கள்
கௌதம் மேனன்-விஜய்
தமிழ் சினிமாவில் ரொமான்டிக்கான காதல் படங்களை இயக்குவதில் சில இயக்குனர்கள் கலக்குவார்கள். அந்த லிஸ்டில் டாப்பில் இருப்பது கௌதம் வாசுதேவ் மேனன்.
இவரது இயக்கத்தில் வந்த அனைத்தும் படங்களுமே ரொமான்டிக்காக தான் இருக்கும். இப்போது இவர் சிம்புவை வைத்து வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். அப்பட ரிலீஸிற்காக ரசிகர்கள் வெயிட்டிங்.
அதேபோல் நடிகர் விஜய்யும் வாரிசு படத்தின் படப்பிடிப்புகளில் பிஸியாக இருக்கிறார். இதுவரை படத்தின் ஃபஸ்ட் லுக்குகள் மட்டுமே வந்துள்ளது. அடுத்த அப்டேட்டிற்காக ரசிகர்கள் வெயிட்டிங்.

புதிய படம்
கௌதம் மேனன் சமீபத்தில் தனது படங்கள் குறித்து பேட்டி கொடுத்துள்ளார். அதில் விஜய்யுடன் இணைவது குறித்து பேசும்போது, முதலில் விஜய்யை வைத்து ஆக்ஷன் திரைப்படம் இயக்க ஆசைப்பட்டேன். ஆனால் இனி அவரை இயக்க வாய்ப்பு கிடைத்தால் அழகான காதல் கதை தான் இயக்குவேன் என கூறியுள்ளார்.
விஜய் வைத்து காதல் படமா அழகாக இருக்குமே என ரசிகர்கள் இப்போதே அந்த படத்தை பற்றி யோசிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
அருள்நிதியின் டைரி திரைப்படம் முதல் நாளில் செய்த நல்ல வசூல்- எவ்வளவு தெரியுமா?