காக்க காக்க படத்திற்காக சூர்யாவிற்கு முன் கௌதம் மேனன் தேர்வு செய்த நடிகர்- யார் தெரியுமா?

Yathrika
in திரைப்படம்Report this article
காக்க காக்க
பல விதமான கதைகளை இயக்கி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த இயக்குனர்கள் உள்ளார்கள்.
அதில் காதலை மையப்படுத்தி கிளாஸான படங்கள் இயக்கி மக்களின் வரவேற்பை பெற்றவர் கௌதம் வாசுதேவ் மேனன்.
மின்னலே, வாரணம் ஆயிரம், விண்ணைத்தாண்டி வருவாயா, காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, என்னை அறிந்தால், வெந்து தணிந்தது காடு என அவரது படங்கள் எல்லாமே தனி ரகம்.
இப்போது கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியாகியுள்ள துருவ நட்சத்திரம் படத்திற்காக ரசிகர்கள் ஆவலாக வெயிட்டிங்.
முதல் சாய்ஸ்
காக்க காக்க திரைப்படம் சூர்யா-ஜோதிகா காதல் வலுப்பெற முக்கிய படமாக அமைந்தது.
சூர்யா முதன்முறையாக போலீஸ் வேடத்தில் நடித்த படம், அன்புச்செல்வன் வேடத்தில் செம்ம மாஸாக கிளாஸாக நடித்திருப்பார். சூர்யா-ஜோதிகா காதல், போலீஸ் வேடம், இதையெல்லாம் தாண்டி ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்த பாடல்கள் மிகவும் பலமாக அமைந்தது.
சூர்யாவின் திரைப்பயணத்திற்கே பெரிய வெற்றிப்படமாக அமைந்த இப்படத்தில் அன்புச்செல்வன் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க வைக்க கௌதம் மேனன் திட்டமிட்டதே விஜய்யை வைத்து தானாம்.
அவர் அந்த நேரத்தில் வேறொரு படத்தில் பிஸியாக இருந்ததால் இதில் நடிக்க தவறியுள்ளார்.