குட் பேட் அக்லி படத்தின் முதல் காட்சி எப்போது தெரியுமா.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்
குட் பேட் அக்லி
அஜித் - ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் குட் பேட் அக்லி. இப்படத்தை மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ளனர்.
விடாமுயற்சி படத்தை தொடர்ந்து இப்படத்திலும் நடிகை த்ரிஷா கதாநாயகியாக நடித்துள்ளனர். மேலும் சுனில், பிரசன்னா, அர்ஜுன் தாஸ் என பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். முதலில் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வந்த நிலையில், அவர் வெளியேறிய பின் தற்போது ஜி.வி. பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.
சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளிவந்து ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து இம்மாதம் இறுதியில் இப்படத்தின் டிரைலர் வெளிவரவுள்ளது. மேலும் புக்கிங் இம்மாதம் இறுதியில் துவங்கும் என கூறப்படுகிறது.
ப்ரீமியர் ஷோ
இந்த நிலையில், குட் பேட் அக்லி திரைப்படத்தின் ப்ரீமியர் ஷோ குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. ஏப்ரல் 10ம் தேதி வெளிவரவுள்ள குட் பேட் அக்லி திரைப்படத்தை, தமிழ்நாட்டில் ஏப்ரல் 9ம் தேதி பிரீமியர் பண்ணப்போவதாக சொல்லப்படுகிறது.
அதுவும் ஏப்ரல் 9ம் தேதி இரவு 10.30 மணிக்கு இப்படத்தின் ப்ரீமியர் ஷோ துவங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. இது அஜித் ரசிகர்களுக்கு மிகப்பெரிய சர்ப்ரைஸை கொடுத்துள்ளது.