காக்க காக்க 2ம் பாகம் குறித்து கௌதம் மேனன் சொன்ன தகவல்- உற்சாகம் அடைந்த ரசிகர்கள்
காக்க காக்க
தமிழ் சினிமா கொண்டாடிய ஒரு சூப்பரான போலீஸ் கதைக்கொண்ட ஒரு திரைப்படம் காக்க காக்க. வளர்ந்து கொண்டிருந்த சூர்யாவிற்கு அப்படம் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.
மின்னலே படத்தை தொடர்ந்து கௌதம் மேனன் இயக்கிய இரண்டாவது திரைப்படம் இது. ஜோதிகா பட கதையை கேட்டதும் அஜித் அல்லது விக்ரமை நடிக்க வைக்கலாம் என கூற அவர்களிடம் கௌதம் மேனன் கேட்டுள்ளார்.
ஆனால் ஏதோ காரணத்தால் அவர்களால் நடிக்க முடியாமல் போக சூர்யா நடித்து வெற்றியும் கண்டார்.
காக்க காக்க 2
கௌதம் மேனன் சிம்புவை வைத்து இயக்கியுள்ள வெந்து தணிந்தது காடு படம் இன்று வெளியானது. இப்பட புரொமோஷனுக்காக கலந்துகொண்ட கௌதம் மேனனிடம் ஒரு ரசிகை, வாரணம் ஆயிரம் 2 எப்போது என கேட்டுள்ளார்.
அதற்கு அவர் வாரணம் ஆயிரம் 2ம் பாகம் எடுக்கும் யோசனை இல்லை, ஆனால் சூர்யாவை வைத்து ஓரு படம் யோசித்துள்ளேன், அது காக்க காக்க 2 படமாக இருக்கலாம் என கூற ரசிகர்கள் உற்சாகமாக சத்தம் எழுப்பியுள்ளனர்.
பைக் டூர் ஆரம்பித்து அஜித் இதுவரை செய்த இடங்கள்- அடுத்து எங்கே செல்கிறார், முழு விவரம் இதோ

பாகிஸ்தானின் ஒற்றை முடிவு... இந்தியாவின் Air India நிறுவனத்திற்கு பல ஆயிரம் கோடிகள் இழப்பு News Lankasri
