தற்போதைய நிலவரப்படி தென்னிந்தியளவில் அதிக வசூல் செய்த திரைப்படங்கள்! விக்ரம் எந்த இடத்தில் உள்ளது தெரியுமா?
அதிக வசூலை குவித்த தென்னிந்திய படங்கள்
சமீப காலமாக தென்னிந்திய திரைப்படங்கள் தான் உலகளவில் அதிக வரவேற்பை பெறும் திரைப்படமாக திகழ்ந்து வருகிறது.
பாலிவுட் திரைப்படங்கள் தொடர்ந்து அவரிகளில் பாக்ஸ் ஆபிஸிலே வெற்றியை பெறாமல் திணறி வருகின்றனர். அதன்படி சமீபத்தில் வெளியான RRR, கே.ஜி.அப்-2, விக்ரம் உள்ளிட்ட திரைப்படங்கள் இந்திய பாக்ஸ் ஆபிஸையே புரட்டி போட்டுள்ளது.
இதற்கிடையே தற்போது தென்னிந்திய திரைப்படங்களில் அதிக வசூல் செய்த திரைப்படங்களை தான் தற்போது பார்க்க இருக்கிறோம்.
1. பாகுபலி 2 - கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான பிரம்மாண்டமான இப்படம் உலகளவில் ரூ. 1810 கோடி வசூல் டாப் இடத்தில் உள்ளது
2. கே.ஜி.எப் 2 - சமீபத்தில் வெளியான இந்த சென்சேஷனல் திரைப்படம் உலகளவில் ரூ.1200 கோடிக்கும் மேல் வசூல் செய்திருக்கிறது.
3.RRR - ராஜமௌலியின் அடுத்த பிரம்மாண்ட படைப்பான இப்படம் உலகளவில் ரூ.1150 கோடிக்கும் மேல் வசூல் செய்திருக்கிறது.
4. 2.0 - தமிழ் சினிமாவின் பிரம்மாண்டங்கள் ஒன்றினைந்த 2.0 உலகளவில் ரூ.655 கோடிக்கும் மேல் வசூல் செய்திருக்கிறது.
5. பாகுபலி - தென்னிந்தியாவின் முதல் சென்சேஷனல் திரைப்படமான பாகுபலி உலகளவில் ரூ.650 கோடிக்கும் மேல் வசூல் செய்திருக்கிறது.
6. சாஹோ- பாகுபலி பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு நடிகர் பிரபாஸ் நடிப்பில் வெளியான இப்படம் ரூ. 433 கோடியளவில் வசூல் செய்துள்ளது.
7. விக்ரம் - கோலிவுட் தரப்பில் பிரம்மாண்ட வெற்றிகளின் தொடக்கமாக வெளியான விக்ரம் திரைப்படம் உலகளவில் தற்போது வரை ரூ.380 கோடிக்கும் மேல் செய்துள்ளது, இதை விட அதிகமாக இப்படம் வசூலை குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திடீரென தள்ளிப்போன பொன்னியின் செல்வன் படத்தின் பிரம்மாண்ட விழா ! என்ன காரணம் தெரியுமா?