3000 கோடி.. கேஜிஎப் தயாரிப்பு நிறுவனம் பிரம்மாண்ட அறிவிப்பு
கன்னட சினிமாவை ஒட்டுமொத்த இந்தியாவும் திரும்பி பார்க்கும் வகையில் செய்த படம் கேஜிஎப். முதல் பாகம் மிகப்பெரிய ஹிட் ஆன நிலையில் இரண்டாம் பாகத்தில் சஞ்சய் தத் வில்லனாக கொண்டுவரப்பட்டார். அந்த படமும் மிகப்பெரிய வசூல் பெற்று தயாரிப்பாளருக்கு பல மடங்கு லாபத்தை ஈட்டியது.
கேஜிஎப் படத்தை தயாரித்த Hombale films அடுத்து காந்தாரா படத்தின் மூலமும் பான் ஹிட் பெற்றது. அடுத்து பல பிரம்மாண்ட படங்களை லைன்அப்பில் வைத்து இருக்கிறது இந்த நிறுவனம்.

3000 கோடி முதலீடு
இந்நிலையில் தற்போது Hombale பிலிம்ஸ் நிறுவனம் தற்போது ஒரு பிரம்மாண்ட அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. அடுத்த 5 ஆண்டுகளில் சினிமாவில் 3000 கோடி முதலீடு செய்ய இருப்பதாக தெரிவித்து இருக்கின்றனர்.
அதனால் இன்னும் பல மிக பிரம்மாண்ட படைப்புகள் கன்னட சினிமாவில் இருந்து வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Also Read: பிரம்மாண்ட தொகைக்கு விற்கப்பட்ட சூர்யா42! சூர்யா கெரியரில் உச்சம்