இந்தியன் 2 படத்தில் இத்தனை நிமிட காட்சிகளை நிக்கியுள்ளதா படக்குழு.. லேட்டஸ்ட் தகவல்!!
இந்தியன் 2
இந்தியன் படத்தின் முதல் பாகம் மிகப்பெரிய வெற்றி பெற்று இன்றுவரை கல்ட் க்ளாசிக்காக கொண்டாடப்படுகிறது. அதன் இரண்டாம் பாகத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. இப்படத்தின் இரண்டாம் பாகம் சமயத்தில் வெளிவந்து கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
இந்தியன் 2 படத்தின் நீளம் கருதி 'இந்தியன் 2' மற்றும் 'இந்தியன் 3' என இரண்டு பாகங்களாக பிரிக்கப்பட்டு இருக்கிறது. இருப்பினும் திரையில் ஓடிக்கொண்டிருக்கும் 'இந்தியன் 2' திரைப்படம் விறுவிறுப்பு இல்லை என்றும் அதற்கு காரணம் படத்தின் நீளம் தான் என்று சிலர் கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
லேட்டஸ்ட் தகவல்!!
இந்த நிலையில் தற்போது இந்தியன் 2 படத்தின் 15 நிமிட காட்சியை படக்குழு நீக்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் 15 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டு சென்சார் பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது, நாளை முதல் நீக்கப்பட்ட காட்சிகளுடன் திரைப்படம் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu
