தமிழ் சினிமாவின் முதல் பான் இந்தியா திரைப்படம்! உலகளவில் கமலின் இந்தியன் எவ்வளவு வசூல் தெரியுமா?
தமிழ் சினிமாவின் பான் இந்தியா திரைப்படம்
இந்திய திரையுலகமே தற்போது பான் இந்தியா திரைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. அப்படி வெளியாகும் திரைப்படங்கள் தொடர்ந்து உலகளவில் பெரிய வசூல் சாதனைகளை நிகழ்த்தி வருவதை பார்த்து வருகிறோம்.
அந்த வகையில் தமிழ் சினிமாவில் உருவான முதல் பான் இந்திய திரைப்படமாக பார்க்கப்படுவது இந்தியன், கமல் நடிப்பில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் 1996 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் இந்தியன்.
பிரமாண்டமாக உருவான இந்தியன் திரைப்படம் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியானது.
மேலும் இன்றுடன் இப்படம் 26 ஆண்டுகள் ஆகியுள்ளதை கமலின் ரசிகர்கள் அப்படம் குறித்த தகவல்களை இணையத்தில் கொண்டாடி வருகின்றனர். அதன்படி இந்தியன் திரைப்படம் உலகளவில் அப்போதே ரூ.64 கோடியளவில் வசூல் செய்திருந்ததாம்.
இந்தியன் திரைப்படம் செய்த வசூல் சாதனையை சில ஆண்டுகள் கழித்து வெளியான ரஜினியின் திரைப்படமே முறியடித்ததாகவும் சொல்லப்படுகிறது.

காபி அடித்து படம் எடுத்தாரா வெங்கட் பிரபு! நெட்டிசனுக்கு அவர் கொடுத்த பதிலடியை பாருங்க