இந்தியன் படத்துக்கு வந்த சிக்கல்.. ஏ.ஆர்.ரகுமான் தான் காரணமா?
இந்தியன்
ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் வெளியான திரைப்படம் "இந்தியன்". இந்த படத்தில் மனிஷா கொய்ராலா, சுகன்யா, கவுண்டமணி என பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
இப்படம் 1996ம் ஆண்டு வெளியாகி பெரிய ஹிட் கொடுத்தது. இதற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார்.

இந்தியன் படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் ஆஸ்திரேலியாவில் உள்ள தனது ஸ்டுடியோவில் பாடல்களை கம்போசிங் செய்து ஒரு ஹார்டிஸ்க் மூலம் இந்திய கொண்டு வந்துள்ளார்.
படத்துக்கு வந்த சிக்கல்
ஆனால் சென்னை விமான நிலையத்தில் உள்ள அதிகாரிகள் அந்த ஹார்டிஸ்க் ஸ்கேன் செய்த போது அனைத்து பாடல்களும் டெலீட் ஆகியுள்ளது. அதை பிறகு அறிந்த இயக்குனர் ஷங்கர் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் இப்படி ஒரு சிக்கல் என பதட்டமாகி உள்ளார்.

இந்நிலையில் அவசரஅவசரமாக மீண்டும் பாடல்கள் கம்போசிங் செய்து ஏ.ஆர்.ரகுமான் கொடுத்துள்ளார். அதன்பிறகு இந்தியன் படம் வெளிவந்து பெரும் வெற்றி பெற்றது.
இந்தியன் படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது இந்தியன் 2 படம் தயாராகி வருகிறது. அதற்கு அனிருத் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
48 வயதில் கர்ப்பமாக இருக்கும் கவுண்டமணி பட நடிகை- யார் பாருங்க, அவர் கூறும் காரணம்