ரஜினி - ஐஸ்வர்யா ராய் இல்லை.. எந்திரனில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா?
எந்திரன் படத்தின் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா?
எந்திரன்
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி - ஐஸ்வர்யா ராய் நடித்து சூப்பர்ஹிட் அடித்த படம் எந்திரன். அந்த படத்தில் ரஜினி சயின்டிஸ்ட் மற்றும் சிட்டி ரோபோ என இரண்டு ரோல்களிலுமே நடித்து இருப்பார்.
தமிழ் சினிமா ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களையும் எந்திரன் கவர்ந்தது. எந்திரன் ஹிட் ஆன பிறகு அதே கூட்டணியில் 2.0 படம் அதை விட அதிக பட்ஜெட்டில் உருவானது குறிப்பிடத்தக்கது.

நடித்திருக்க வேண்டியது இவரா
முதலில் இந்த படத்தில் ரஜினி - ஐஸ்வர்யா ராய் நடிக்க ஒப்பந்தம் ஆகவில்லை. நடிகர் கமல்ஹாசன் மற்றும் ப்ரீத்தி சிந்தா ஆகியோர் தான் நடிக்க இருந்தனர், ஆனால் சில காரணங்களால் ஹீரோ ஹீரோயின் மாறி அதில் ரஜினி - ஐஸ்வர்யா ராய் ஆகியோர் நடித்தனர்.
கமல் - ப்ரீத்தி ஜிந்தா ஆகியோர் இருக்கும் போட்டோ இதோ


