டிவியை விட்டு விலகுகிறாரா பாண்டியன் ஸ்டோர்ஸ் கதிர்? ரசிகர்கள் ஷாக்
பாண்டியன் ஸ்டோர்ஸ்
விஜய் டிவியின் டாப் சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். அதில் கதிர் என்ற முக்கிய ரோலில் நடித்து வருகிறார் குமரன்.
அந்த தொடரில் வரும் கதிர் முல்லை ஜோடிக்கு எக்கச்சக்க ரசிகர்கள் இருக்கிறார்கள். சீரியலில் முல்லை ரோலில் மூன்று நடிகைகள் இதுவரை மாறி இருக்கிறார்கள் என்றாலும், கதிர் ரோலில் குமரன் தான் தொடர்ந்து நடித்து வருகிறார்.
விலகுகிறாரா?
குமரன் சமீப காலமாக சீரியல் மட்டுமின்றி வெப் சீரிஸிலும் அதிகம் நடிக்க தொடங்கி இருக்கிறார். வதந்தி வெப் சீரிஸுக்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் அடுத்து மாயதோட்டா என்ற சீரிஸில் மெயின் ரோலில் நடித்து வருகிறார்.
இவர் தொடர்ந்து சீரிஸ் நடிக்க தொடங்கி இருக்கும் நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ஷூட்டிங்கிலும் பங்கேற்று வருகிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் முடிவுக்கு வந்த பிறகு அவர் புது சீரியலில் நடிக்க மாட்டார் என கூறப்படுகிறது. இனி வெப் சீரிஸ் மற்றும் சினிமாவில் கவனம் செலுத்த இருப்பதாகவும் கூறப்படுகிறது.
150 கோடியில் கட்டப்பட்டுள்ள தனுஷ் வீட்டின் வெளிப்புறத்தை பார்த்துள்ளீர்களா.. இதோ பாருங்க

ஜேர்மன் பொதுத் தேர்தல் முடிவுகள் SPD கட்சியினருக்கு கசப்பானது! பிரெடெரிக் மாட்ஸுக்கு சேன்சலர் ஸ்கோல்ஸ் வாழ்த்து News Lankasri

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan
