ஜெயிலர் திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் பேரனாக நடிக்கும் யூடியூப் பிரபலம்! யார் பாருங்க
ஜெயிலர்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அண்ணாத்த திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிக்கும் திரைப்படம் ஜெயிலர்.
பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார். அவர் இயக்கத்தில் கடைசியாக தளபதி விஜய் நடிப்பில் பீஸ்ட் திரைப்படம் வெளியாகி இருந்தது.
மேலும் சமீபத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, யோகி பாபு, விநாயகன் உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்கள் நடிப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
யூடியூப் பிரபலம்
இந்நிலையில் தொடர்ந்து ஜெயிலர் திரைப்படம் குறித்து பல விஷயங்கள் வெளியாகி வருகிறது, அந்த வகையில் தற்போது இப்படத்தில் இணைந்துள்ள குழந்தை நட்சத்திரம் குறித்து தகவல் வெளியாகியிருக்கிறது.
ஆம், யூடியூப் மூலம் பிரபலமான rithu rocks ரித்விக் இப்படத்தில் இணைந்திருக்கிறார். மேலும் அவர் இப்படத்தில் ரஜினியின் பேரனாக நடிக்க வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.
அடுத்தகட்ட படப்பிடிப்புகாக வெளிநாட்டிற்கு செல்லும் AK61 படக்குழு