வெறித்தனமாக உருவாகி வரும் ஜெயிலர் ! மேக்கிங் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்திய சன் பிக்சர்ஸ்
ஜெயிலர்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ஜெயிலர்.
பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் ஜெயிலர் திரைப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
மேலும் ஏற்கனவே இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி உள்ளிட்டோர் நடிப்பதாக அறிவித்து இருந்தனர்.
இதற்கிடையே கன்னட திரையுலகின் முன்னணி நடிகர் சிவராஜ்குமார் ஜெயிலர் படத்தில் நடித்து வருவதை சமீபத்தில் புகைப்படத்துடன் அறிவித்து இருந்தனர்.
இந்நிலையில் தற்போது சன் பிக்சர்ஸ் டிவிட்டர் பக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்டு இருக்கிறது. இதோ அந்த வீடியோவை நீங்களே பாருங்கள்
Here’s a glimpse of Superstar @rajinikanth from the sets of #Jailer 🤩
— Sun Pictures (@sunpictures) November 18, 2022
@Nelsondilpkumar @anirudhofficial pic.twitter.com/3EtAap0FUs
மிகவும் சிம்பிளாக தயாரிக்கப்பட்ட கௌதம் கார்த்திக், மஞ்சிமா திருமண பத்திரிக்கை