உலகளவில் 700 கோடியை கடந்தாலும் முக்கிய இடத்தில் படுதோல்வியடைந்த ஜவான்.. ஷாரூக்கானுக்கே இப்படியொரு நிலைமையா
பாக்ஸ் ஆபிஸ் கிங்
கடந்த 7ஆம் தேதி வெளிவந்து இன்று வரை பாக்ஸ் ஆபிசில் ஆதிக்கம் செலுத்தி வரும் திரைப்படம் ஜவான்.
உலகளவில் ரூ. 785 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ள ஜவான் இந்த ஆண்டு ஷாருக்கானின் ரசிகர்கள் டபுள் ட்ரீட் ஆக அமைந்துள்ளது.
ஏற்கனவே இந்த ஆண்டு ஷாருக்கான் நடிப்பில் வெளிவந்த பதான் ரூ. 1000 கோடி வசூல் செய்த நிலையில், கண்டிப்பாக ஜவான் படமும் ரூ. 1000 கோடியை கடந்து வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
படுதோல்வியடைந்த ஜவான்
உலகளவில் ப்ளாக் பஸ்டர் என்றாலும் கூட கேரளாவில் படுதோல்வியை சந்தித்துள்ளது ஜவான். ஆம், கேரளா வசூலில் ஜவான் அடிவாங்கிய காரணமாக தோல்வியை தழுவியுள்ளது.
அதே போல் தமிழகத்திலும் ஆவெரேஜ் என்று தான் கூறப்படுகிறது. இந்த இரண்டு இடங்களை தவிர்த்து உலகளவில் ஜவான் படத்திற்கு மாபெரும் வெற்றி என கூறுகின்றனர்.