ரிலீஸுக்கு முன்பே ரூ. 250 கோடி வசூல்.. ஜவான் செய்த மாஸ் சம்பவம்
ஜவான்
அட்லீ இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ஜவான். ஷாருக்கான் ஹீரோவாக நடித்து வரும் இப்படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடித்துள்ளார்.
மேலும் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க அனிருத் இசையமைக்கிறார். வருகிற செப்டம்பர் 7ஆம் தேதி இந்திய ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் ஜவான் திரைப்படம் ரிலீஸ் ஆகிறது. மேலும் நாளை இப்படத்தின் ட்ரைலர் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ. 250 கோடி வசூல்
இந்நிலையில், ரிலீஸ் ஆவதற்கு முன்பே வசூலில் பட்டையை கிளப்பியுள்ளது ஜவான். ஆம், ஜவான் திரைப்படம் ரிலீஸுக்கு முன்பே ரூ. 250 கோடி வரை வசூல் செய்துள்ளது.

சாட்டிலைட், ஆடியோ, டிஜிட்டல் ஆகிய உரிமைகள் மொத்தமாக ரூ. 250 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தான் ரிலீஸுக்கு முன்பே ஜவான் திரைப்படம் ரூ. 250 கோடி வசூல் செய்துவிட்டது என கூறப்படுகிறது.
மேலும் இப்படம் கண்டிப்பாக ரூ. 1000 கோடிக்கும் மேல் வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கோபி எதிர்பார்க்காததை செய்த பாக்கியா.. அடுத்த வாரம் பாக்கியலட்சுமி சீரியலில் நடக்கப்போவது இதுதான், ப்ரோமோ வீடியோ