ஜவான் திரைப்படத்தின் ப்ரீ புக்கிங்கில் மட்டுமே இத்தனை கோடி வசூல் செய்துவிட்டதா.. வேற லெவல்
ஜவான்
நான்கு வருட உழைப்பில் உருவான படம் ஜவான். இடையில் ஜவான் நின்றுவிட்டது, படம் இனிமேல் அடுத்தகட்டத்துக்கு செல்லாத என்று கூட தகவல் வெளிவந்தது.
ஆனால், அதன்பின் அதையெல்லாம் சரி செய்து மீண்டும் ஜவான் திரைப்படம் துவங்கி வருகிற 7ஆம் தேதி உலகளவில் வெளியாக தயாராகியுள்ளது. அட்லீ இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி என பல நட்சத்திரங்கள் நடிக்க அனிருத் இசையமைத்துள்ளார்.
விறுவிறுப்பாக இப்படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஜவான் படத்திற்கான ப்ரீ புக்கிங் தற்போது துவங்கியுள்ளது.
ப்ரீ புக்கிங்
இதில் ஜவான் படம் இதுவரை மட்டுமே உலகளவில் ரூ. 25 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. இது ஜவான் படத்திற்கு கிடைத்துள்ள மாபெரும் வரவேற்பு என தெரிவிக்கின்றனர்.
இதனால் முதல் நாள் மட்டுமே ஜவான் படம் மாபெரும் வசூல் சாதனை படைக்கும் என்றும் கூறப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்க போகிறது என்று.
விஜய் டிவி நட்சத்திரம் நாஞ்சில் விஜயனுக்கு திருமணம் முடிந்தது.. மணப்பெண் யார் தெரியுமா