விபத்தில் சிக்கிய நடிகர் ஜூனியர் என்டிஆர்.. இரண்டு வாரங்களுக்கு ஓய்வு
ஜூனியர் என்டிஆர்
தெலுங்கு திரையுலகில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் ஜூனியர் என்டிஆர். இவர் நடிப்பில் கடைசியாக வார் 2 படம் வெளிவந்தது.
ஹிந்தியில் வெளிவந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் கடுமையான விமர்சனங்களை பெற்று படுதோல்வியை சந்தித்தது. இதை தொடர்ந்து ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவாகி வரும் படம் டிராகன். இப்படத்தை கேஜிஎப் பட இயக்குநர் பிரஷாந்த் நீல் இயக்கி வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்திற்காக நடிகர் ஜூனியர் என்டிஆர் தனது உடல் எடையை குறைத்து மிகவும் ஸ்லிம்மாக மாறியுள்ளார். அந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் கூட இணையத்தில் வெளிவந்து படுவைரலானது.
கையில் காயம்
படங்கள் மட்டுமின்றி ஜூனியர் என்டிஆர் விளம்பரங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். இந்த நிலையில், விளம்பர படப்பிடிப்பு தளத்தில் நடிகர் ஜூனியர் என்டிஆர் விபத்தில் சிக்கியுள்ளார். இதில் அவருடைய கையில் காயம் ஏற்பட்டுள்ளது.
அவர் முழுமையாக குணமடைய இரண்டு வாரங்கள் ஆகும், அதுவரை ஓய்வு எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளார். மேலும், அவருடைய உடல்நிலை சீராக உள்ளது. வேறு எந்த வதந்திகளையும் நம்ப வேண்டாம்.