பல வருடங்களுக்கு பிறகு முறியடிக்கப்பட்ட ரஜினி பட வசூல் சாதனை! No.1 இடத்தை பெறுமா விக்ரம்?
கபாலியை முந்திய விக்ரம்
உலகநாயகன் கமல் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் விக்ரம், பெரிய எதிர்பார்பிற்கு இடையே வெளியான விக்ரம் திரைப்படம் வசூல் சாதனைகளை நிகழ்த்தி வருகிறது.
அதன்படி தற்போது வரையில் விக்ரம் திரைப்படம் உலகளவில் ரூ.320 கோடிக்கு மேல் வசூலை குவித்துள்ளது, இனி வரும் நாட்களில் இப்படம் இதை விட பல மடங்கு பெரிய வசூலை குவிக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.
இதனிடையே ரஜினி நடிப்பில் இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் கபாலி பெரிய வசூலை குவித்த அப்படம் தான் தமிழ் திரைப்படங்களில் அதிக வசூலை குவித்த இரண்டாவது திரைப்படமாக இருந்தது.
இந்நிலையில் தற்போது கபாலி திரைப்பட வசூலை முந்தியுள்ளது விக்ரம் திரைப்படம், இதன்முலம் அதிக வசூல் செய்த தமிழ் திரைப்படங்களில் இரண்டாவது திரைப்படம் என்ற அங்கிகாரத்தை பெற்றுள்ளது விக்ரம்.
மேலும் ரஜினியின் 2.0 தான் NO.1 இடத்தில் இருந்து வருகிறது, இனி வரும் நாட்களில் விக்ரம் அப்படத்தை நெருங்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

மறைந்த பாடகர் எஸ்.பி.பி-காக மேடையில் கண்கலங்கி அழுத இளையராஜா.. உருக்கமான வீடியோ