காதல் ஓவியம் பட ஹீரோவை நினைவு இருக்கா! விஜய் படத்தில் பல வருடங்களுக்கு பின் என்ட்ரி
ரீ என்ட்ரி கண்ணன்
இயக்குநர் பாரதிராஜா இயக்கத்தில் 1982ம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் காதல் ஓவியம். உணர்ச்சிபூர்வமான காதல் கதைக்களத்தில் உருவாகியிருந்த இப்படத்தில் ராதா, கண்ணன், கவுண்டமணி, ஜனகராஜ், ராதாரவி, மணிவண்ணன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.
இதில் கதாநாயகன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் கண்ணன். இவர் இப்படத்தில் சிறப்பாக நடித்திருப்பார். ஆனால், இப்படத்திற்கு பின் அவரை வேறு எந்த திரைப்படத்திலும் பார்க்க முடியவில்லை.
ரீ என்ட்ரி
இந்த நிலையில், கிட்டதட்ட 40 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமா பக்கம் வராத கண்ணன், தற்போது விஜய் ஆண்டனியின் படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். அருண் பிரபு இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் சக்தி திருமகன்.
இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் காதல் ஓவியன் பட ஹீரோ கண்ணன் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படம் வருகிற கோடையில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளனர். மேலும் இது விஜய் ஆண்டனியின் 25வது திரைப்படமாகும்.

Viral Video: பாம்புகள் கூட்டமாக ஓய்வெடுப்பதை பார்த்ததுண்டா? 7 மில்லியன் பேரை புல்லரிக்க வைத்த காட்சி Manithan

15 வயதில் திருமணம், கணவர் இல்ல, மகன்களை வளர்க்க இத செய்தேன்.. பாக்கியலட்சுமி செல்வி எமோஷனல் Manithan

உக்ரைனில் பொதுமக்கள் கொல்லப்படுவதை நிறுத்துவது எப்போது? பத்திரிகையாளர் கேள்விக்கு புடினின் செய்கை News Lankasri
