கணவரின் இழப்பில் இருந்து மீனாவை மீட்டெடுக்க கலா மாஸ்டர் செய்யும் விஷயம்.. என்ன தெரியுமா
மீனாவிற்கு எற்பட்ட இழப்பு
கடந்த ஆண்டு நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் காலமானார். இவருடைய மறைவு பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது.
வித்யாசாகரின் மறைவுக்கு பின் மீனாவிற்கு உறுதுணையாக இருக்கிறார் கலா மாஸ்டர். கொஞ்சம் கொஞ்சமாக தனது கணவரின் இழப்பில் இருந்து மீண்டு வந்துகொண்டிருக்கும் மீனாவிற்கு மகிழ்ச்சியை அள்ளி தரும் வகையில் கலா மாஸ்டர் செய்யப்போகும் விஷயம் அமைந்துள்ளது.
கலா மாஸ்டர் செய்யும் விஷயம்
ஆம், திரையுலகில் மீனா 40 ஆண்டுகாலம் நிறைவு செய்துள்ள நிலையில், மீனா 40 என விழா ஒன்றை நடத்த முடிவு செய்துள்ளாராம் கலா மாஸ்டர்.
குழந்தை நட்சத்திரமாக 1982ல் நடிக்க துவங்கிய மீனா கடந்த 2022ம் ஆண்டுடன் 40 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதால் இந்த விழாவை நடத்த கலா மாஸ்டர் திட்டமிட்டுள்ளாராம்.
இந்த விழாவில் ரஜினிகாந்த், கமல் ஹாசன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்துகொள்ளப்போவதாக கூறப்படுகிறது.
நாங்க போனது ஹனிமூன் இல்லை.. திருமணத்திற்கு பின் ஹன்சிகா கூறிய விஷயம்