கல்கி 2898 AD 2ல் கமல் அமிதாப் பச்சன் மோதும் காட்சிகள்.. இயக்குனர் நாக் அஸ்வின் பேட்டி!!
கல்கி 2898 AD
நடிகர் பிரபாஸ் நடிப்பில் நாக் அஸ்வின் இயக்கத்தில் கடந்த மாதம் ஜூன் 27-ஆம் தேதி வெளியானது திரைப்படம் தான் கல்கி 2898 AD.
இப்படத்தில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி, பசுபதி மற்றும் ஷோபனா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அதுமட்டுமின்றி படத்தில் சிறப்பு தோற்றத்தில் பல தெலுங்கு பிரபலங்கள் நடித்துள்ளனர்.
கல்கி திரைப்படம் வெளியானதில் இருந்து தொடர்ந்து உலகளவில் மிகப்பெரிய வரவேற்பை மக்கள் மத்தியில் பெற்றுள்ளது. இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளும் கொண்டாடி வருவதாக சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது.
பேட்டி
இந்நிலையில் கல்கி படத்தின் இயக்குனர் நாக் அஸ்வின், இரண்டாம் பாகம் குறித்து பேசியுள்ளார். அதில் அவர், இரண்டாம் பாகத்தில் பல சுவாரஸ்யமான விஷயங்கள் இருக்கின்றன. படத்தில் புதிய கதாபாத்திரங்கள் நிறைய உள்ளன.
மேலும் இந்த படத்தில் கமல் மற்றும் அமிதாப் பச்சன் இந்த இரண்டு லெஜண்ட்கள் மோதும் காட்சிகளும் இருக்கலாம். ஆனால் அது பற்றி என்னால் இப்போது சொல்ல முடியாது. அந்த இரண்டாம் பாகத்தின் ஷூட்டிங் 30 நாட்கள் தான் முடிந்து இருக்கிறது. இன்னும் நிறைய காட்சிகள் எடுக்க இருக்கிறது என்று நாக் அஸ்வின் கூறியுள்ளார்.

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri
