முதல் முறையாக விஜய்யுடன் இணைந்து நடிக்கும் கமல்.. லோகேஷ் கனகராஜின் வெறித்தனமான சம்பவம்
தளபதி 67ல் கமல்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அடுத்ததாக உருவாகவிருக்கும் திரைப்படத்தின் ஹீரோ விஜய் என்பது அனைவரும் தெரிந்த விஷயம் தான்.
இப்படத்தில் சஞ்சய் தத், விஷால், திரிஷா உள்ளிட்டோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கப்போவதாக ஏற்கனவே தகவல் வெளியாகிவிட்டது. ஆனால், இதுவரை இப்படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகவில்லை.
இன்னும் சில வாரங்களில் இப்படத்தின் அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது. அதை பொறுத்திருந்து பார்ப்போம்.
வெறித்தனமான சம்பவம்
இந்நிலையில், இப்படத்தில் ஒரு கேமியோ ரோலில் விஜய்யுடன் இணைந்து கமல் ஹாசன் நடிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன்முலம் தளபதி 67 படத்தை லோகேஷ் கனகராஜ் தன்னுடைய 'எல்.சி.யு' கான்செப்டில் இணைக்க முயற்சி செய்து விக்ரம் இப்படத்தை தளபதி 67வனுடன் இணைத்துள்ளாரா என்று கூற பேச்சு துவங்கிவிட்டது.
ஒரு வேலை அப்படி இருந்தால் கண்டிப்பாக திரையரங்கம் தெறிக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. அதுமட்டுமின்றி கண்டிப்பாக வசூல் ரூ. 500 கோடியை கடந்து மாபெரும் சாதனையை படைக்கும் என்று கூறப்படுகிறது.

ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகள் வச்சிருக்கீங்களா - இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க IBC Tamilnadu
