இந்தியன் 2 படத்தில் கமலுக்கு 105 வயதா..! ஷாக்கான ரசிகர்கள்

By Kathick Nov 04, 2023 07:30 AM GMT
Report

இந்தியன் 2

ஷங்கர் இயக்கத்தில் உலக நாயகன் கமல் ஹாசன் நடித்து வரும் திரைப்படம் இந்தியன் 2. இப்படத்தை லைக்கா மற்றும் ரெட் ஜெயிண்ட் நிறுவனம் இணைந்து தயாரித்து வருகிறது.

இந்தியன் 2 படத்தில் கமலுக்கு 105 வயதா..! ஷாக்கான ரசிகர்கள் | Kamal Age Is 105 In Indian 2

பெரிதும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் இப்படத்தில் கமலுடன் இணைந்து சித்தார்த், எஸ்.ஜே. சூர்யா, காஜல் அகர்வால், பிரியா பவானி ஷங்கர், ராகுல் ப்ரீத் சிங், மறைந்த நடிகர் விவேக் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்தியன் 2 படத்தில் கமலுக்கு 105 வயதா..! ஷாக்கான ரசிகர்கள் | Kamal Age Is 105 In Indian 2

இப்படத்திலிருந்து கமலின் இன்ட்ரோ வீடியோ நேற்று வெளிவந்தது. இந்தியன் முதல் பாகத்தில் எப்படி லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை சேனாபதி தண்டித்தாரோ அதே போல் தற்போது இரண்டாவது பாகத்திலும் மீண்டும் என்ட்ரி கொடுக்கிறார்.

இந்தியன் 2 படத்திற்கும் காப்பியடித்து தான் இசையமைத்துள்ளாரா அனிருத்.. வைரலாகும் வீடியோ

இந்தியன் 2 படத்திற்கும் காப்பியடித்து தான் இசையமைத்துள்ளாரா அனிருத்.. வைரலாகும் வீடியோ

சேனாபதிக்கு 105 வயதா

இந்நிலையில், இந்தியன் 2 படத்தில் சேனாபதி கதாபாத்திரத்திற்கு கிட்டதட்ட 105 வயது ஆகிறது. இந்தியன் படத்தின் கதையின்படி சேனாபதி கதாபாத்திரம் 1918ஆம் ஆண்டு பிறந்தவர். சுதந்திரத்திற்காக போராடியவர் என்பதெல்லாம் அனைவரும் அறிவோம்.

இந்தியன் 2 படத்தில் கமலுக்கு 105 வயதா..! ஷாக்கான ரசிகர்கள் | Kamal Age Is 105 In Indian 2

இப்படியிருக்கையில் ரசிகர்கள் பலரும், சேனாபதிக்கு 105 வயது ஆகிறது இதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் என கேள்வி எழுப்பி வருகிறார்கள். இதுகுறித்து இயக்குனர் ஷங்கர் விரைவில் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US