கார்த்தியின் சூப்பர் ஹிட் திரைப்படத்தில் கமல் ! அவருக்கு பதிலாக தேர்தெடுக்கப்பட்ட நடிகர்
கொம்பன்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் கார்த்தி, இவர் நடிப்பில் அடுத்தடுத்த பல முக்கிய திரைப்படங்கள் வெளியாக இருக்கின்றன.
அதன்படி பொன்னியின் செல்வன், சர்தார் உள்ளிட்ட திரைப்படங்கள் கார்த்தி நடிப்பில் ரிலீஸாக இருக்கிறது.
இந்நிலையில் கார்த்தி நடிப்பில் இயக்குநர் முத்தையா இயக்கத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் கொம்பன்.

கமலுடன் கார்த்தி
மக்களிடையே பெரிய வரவேற்பை பெற்று வெற்றியடைந்த இப்படத்தில் கார்த்தியுடன் ராஜ்கிரண், லக்ஷ்மி மேனன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருப்பார்.
இதனிடையே இப்படத்தில் நடிகர் ராஜ்கிரண் நடித்த கதாபாத்திரத்தை இயக்குநர் முத்தையா எழுதியதே கமல்ஹாசனுக்காக தானாம்.
இடையில் இயக்குநர் முத்தையா கமல் ஹாசனிடம் கதை கூறியுள்ளதாக தகவல் பரவி வந்தன. இந்த கூட்டணியை விரைவில் இணையுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

தனுஷின் பட போஸ்டரில் அலட்சியமா
ஜேர்மனியின் AfD கட்சிக்கு வழங்கப்படும் பல நூறு மில்லியன் யூரோ பொது நிதி - எழுந்துள்ள சர்ச்சை News Lankasri
அமெரிக்காவால் வெனிசுலாவுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி: கச்சா எண்ணெய் ஏற்றுமதி 75% வீழ்ச்சி News Lankasri