விஜய் டிவியிடம் டபுள் சம்பளம் கேட்க போகிறேன்: ஷாக் கொடுத்த கமல்
பிக் பாஸில் இன்று ஞாயிற்றுக்கிழமை எபிசோடில் போட்டியாளர்களிடம் கமல் பேசும்போது போட்டியாளர்களை எச்சரித்து இருக்கிறார். சிலர் வேறு மொழியில் பேசுவது பற்றி தான் அது.
எச்சரித்த கமல்
"நீங்கள் பிக் பாஸ் வீட்டில் இருப்பது இந்த வீட்டுக்கு செய்யும் உபகாரம் அல்ல. இது ஸ்டேட் லெவல் ஸ்போர்ட்ஸ் மீட் போல் இல்லை.. ஜெயிச்சா மெடல் கிடைக்கும், இல்லனா போக்குவரத்து செலவு மட்டும் குடுப்பாங்க. இங்கு அப்படி இல்ல.. எல்லாருக்குமே சம்பளம் இருக்கு. எனக்கும் சம்பளம் தராங்க."
அவரவர் வேலையை செய்ய வேண்டும், இல்லை என்றால் ஒப்பந்தத்தை மீறுகிறீர்கள் என அர்த்தம். முதலீடு போட்டு தொழில் செய்யும் முதலாளி என்ன செய்வாரோ அதையும் செய்ய வேண்டி வரும்.
எனக்கு சில உரிமைகள் இருக்கு. நீங்கள் தொடர்ந்து விதிகளை மீறி, பேச்சை மதிக்காமல் இருந்தால்.. நானே ரெட் கார்டு கொடுத்து வெளியில் அனுப்ப முடியும். அதை நான் இதுவரை செய்ததில்லை. உங்கள் வாழ்க்கைக்காக நான் யோசிக்கிறேன்.
மைக்கை எடுத்துட்டு போசுவது, ரகசியமாக பேசுவது, எழுதி காட்டுவது, வேறு மொழிகளில் பேசுவது, பகலில் தூங்குவது, டாஸ்க்குக்கு லேட்டாக வருவது.. இது கவனக்குறைவு அல்ல, அலட்சியம்.
விஜய் டிவியிடம் சண்டை போட போகிறேன்
"இது தமிழ் பிக் பாஸ் என நினைத்து நான் வந்திருக்கிறேன். விஜய் டிவி இடம் சண்டை போட இருக்கிறேன். நடுவில் இது மலையாள பிக் பாஸ் ஆக மாறிட்டு வருதே.. அதனால் நானும் டபுள் சம்பளம் கேட்கலாம் என இருக்கிறேன்."
"எனக்கு மொழிகள் பிடிக்கும், மலையாள படத்தில் நடித்து இருக்கிறேன். ஏக் துஜே கே லியே படத்தின் மூலம் பிரபலமானவன் நான் ஆனால் இந்தி திணிப்புக்கு எதிரானவன் நான்" என கமல் கோபமாக பேசி இருக்கிறார்.
ஷெரினா மற்றும் ஆயிஷா இருவரும் மலையாளத்தில் பேசுவது பற்றி தான் கமல் இப்படி கோபமாக பேசி இருக்கிறார்.
ஆனால் ஷெரினா வெளியில் வந்த பின் மேடையில் 'எனக்கு மலையாளம் ரொம்ப பிடிக்கும்' என அவரிடம் கமல் கூறினார். மேலும் அவரிடம் கமல் நீண்ட நேரம் மேடையில் மலையாளத்தில் உரையாடினார். வீட்டுக்குள் தான் பேச கூடாது, இங்கே பேசலாம் என கமல் கூறினார்.
Also Read: பல ஆயிரம் கோடி சொத்து வைத்திருக்கும் அமிதாப் பச்சன்! ஆனால் 3000 ரூ. டீச்சர் வேலைக்கு சென்ற அவர் சொந்த மகள்