ரோபோ ஷங்கரின் கடைசி ஆசை, கமல்ஹாசன் எடுத்த அதிரடி முடிவு.. ரசிகர்கள் பாராட்டு!
ரோபோ ஷங்கர்
ஸ்டாண்ட் காமெடியனாக தனது பயணத்தை தொடங்கியவர் ரோபோ ஷங்கர். சின்னத்திரையில் பிரபலமான இவர் விஸ்வாசம், மாரி, வேலைக்காரன், வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வெள்ளித்திரையிலும் தனி இடத்தை பிடித்தார்.
மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டவர் சமீபத்தில் தான் குணமாகி படங்கள் நடிக்க தொடங்கினார். ஆனால், திடீரென சில தினங்களுக்கு முன் ரோபோ ஷங்கர் உடல்நலக் குறைவால் உயிரிழந்து விட்டார்.
ரோபோ ஷங்கருக்கு கமல்ஹாசனுடன் ஒரே ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என ஆசை இருந்தது. ஆனால் அவர் திடீரென உயிரிழந்த நிலையில், அந்த ஆசை நிறைவேறாமல் போனது.
அதிரடி முடிவு!
இந்நிலையில், ரோபோ ஆசையை நிறைவேற்ற கமல் ஒரு அதிரடி முடிவு எடுத்துள்ளார்.
அதாவது, கமல்ஹாசன் தன்னுடைய அடுத்த படத்தில், ரோபோவின் ஆசையை நிறைவேற்றும் விதமாக, அவருடைய மகள் இந்திரஜாவை ஒரு முக்கிய ரோலில் நடிக்க வைக்க முடிவு செய்துள்ளாராம்.