H Vinoth அப்போ அவ்ளோ தானா சார்...ரசிகர்கள் பெரும் கவலை
H.வினோத்
வினோத் தமிழ் சினிமாவில் சதுரங்க வேட்டை, தீரன், நேர்கொண்ட பார்வை ஆகிய தரமான படங்களை கொடுத்தவர்.
ஆனால், அதை தொடர்ந்து வலிமை படம் அவருடைய திரைப்பயணத்தில் பெரும் சறுக்கலை தர, உடனே மீண்டும் அஜித்துடன் இணைந்து துணிவு என்ற மெகா ஹிட் படத்தை கொடுத்தார்.
உடனே அடுத்து உலகநாயகன் கமலுடன் கூட்டணி அமைத்த இவர், கமல் கதை, வசனத்தில் ஒரு படத்தை இயக்க முடிவு செய்தார். விக்ரமிற்கு பிறகு கண்டிப்பாக இந்த படம் தான் தொடங்கும் என அடித்து சொல்லப்பட்டது. ஷுட்டிங்-ம் தொடங்கியது.
ரசிகர்கள் கவலை
ஆனால், என்ன என்று தெரியவில்லை, அந்த படத்தை அப்டியே விட்டு, மணிரத்னம் தக் லைப் படத்திற்கு கமல் சென்றுவிட்டார், இது ரசிகர்கள் மத்தியில் அப்போ வினோத் படம் அவ்ளோ தானா கமல் சார் என்ற சோகமான கேள்வியை கேட்க வைத்துள்ளது.