கமல் 234ல் இணையும் முன்னணி நட்சத்திரங்கள்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கமல் 234
மணி ரத்னம் இயக்கத்தில் உலக நாயகன் கமல் ஹாசன் நடிக்கவுள்ள படம் கமல் 234. இப்படத்தை ரெட் ஜெயிண்ட், ராஜ் கமல் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரிக்கிறது.
இப்படத்தின் ப்ரோமோ வீடியோ இன்று மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளதாக நேற்று அறிவித்தனர். மேலும் இன்று காலையில் இருந்து படக்குழுவினர் சில போஸ்டர்களை வெளியிட்டு வருகிறார்கள்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு
முதலில் கமல் ஹாசனின் போஸ்டர் வெளியிட்ட படக்குழு தற்போது இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் டுள்ளார் சல்மான் நடிக்கிறார் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.
இவரை தொடர்ந்து தற்போது இப்படத்தில் நடிகை திரிஷா மற்றும் ஜெயம் ரவி ஆகியோர் கமிட்டாகியுள்ளார்கள். இவர்களை தொடர்ந்து யார்யாருடைய அறிவிப்பு வெளியகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.