150 கோடி சம்பளம்.. கல்கி படத்தில் வில்லனாக நடிக்க ஒப்புக்கொண்டது குறித்து பேசிய கமல் ஹாசன்

By Kathick Jul 26, 2023 04:30 AM GMT
Report

கல்கி 

பிரபாஸ் நடிப்பில் அடுத்ததாக உருவாகி வரும் திரைப்படம் கல்கி 2989 ஏ.டி. நாக் அஸ்வின் இயக்கும் இப்படத்தில் அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், திஷா பாட்னி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.

150 கோடி சம்பளம்.. கல்கி படத்தில் வில்லனாக நடிக்க ஒப்புக்கொண்டது குறித்து பேசிய கமல் ஹாசன் | Kamal Haasan About Kalki Movie

மேலும் உலகநாயகன் கமல் ஹாசன் வில்லனாக நடிக்கிறார். இதற்காக ரூ. 150 கோடி சம்பளம் கமலுக்கு பேசப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளிவந்த கல்கி படத்தின் கிலிம்ப்ஸ் வீடியோ கூட ரசிகர்கள் மத்தியில் வைரலானது.

150 கோடி சம்பளம்.. கல்கி படத்தில் வில்லனாக நடிக்க ஒப்புக்கொண்டது குறித்து பேசிய கமல் ஹாசன் | Kamal Haasan About Kalki Movie

ஆனால், இந்த கிலிம்ப்ஸ் வீடியோவில் கமல் எந்த ஒரு காட்சியிலும் இடம்பெறவில்லை. இதனால் கல்கி படத்தில் கமலின் லுக் எப்படி இருக்கும் என பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.

இந்நிலையில், கல்கி திரைப்படம் குறித்து கமல் ஹாசன் பேசியுள்ளார்.

அவர் பேசியதாவது

" கல்கி படத்தில் வில்லனாக நடிக்கிறேன். இதில் கதாநாயகனுக்கு எவ்வளவு முக்கியம் இருக்குமோ அந்த அளவுக்கு வில்லன் கதாபாத்திரத்துக்கும் முக்கியத்துவம் இருக்கும். 'கல்கி' படத்தில் நான் நடிக்கிறேன் என்றதும் யாரும் நம்பவில்லை. சில ஆயிரம் ஆண்டுகளாக நாம் புராணங்களை பின்பற்றி வருகிறோம்.

150 கோடி சம்பளம்.. கல்கி படத்தில் வில்லனாக நடிக்க ஒப்புக்கொண்டது குறித்து பேசிய கமல் ஹாசன் | Kamal Haasan About Kalki Movie

அந்த புராணங்களின் பெருமையை பறை சாற்றுவதற்காகவே நாக் அஸ்வின் இந்த படத்தை எடுக்கிறார். நானும் இதில் சந்தோசமாக நடிக்க இருக்கிறேன். ஒரு படத்துக்கு ஹீரோ எவ்வளவு முக்கியமோ, வில்லனும் அந்த அளவுக்கு முக்கியம். அதனால்தான் வில்லனாக நடிக்க ஒப்புக்கொண்டேன்" என கூறியுள்ளார் கமல்.

தமிழ்நாட்டில் மட்டுமே லியோ இத்தனை கோடி வசூல் செய்துவிட்டதா! மாஸ் காட்டும் விஜய் 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US