திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கமல் ஹாசன்.. அதிர்ச்சியளிக்கும் தகவல்
கமல் ஹாசன்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமானவர் கமல் ஹாசன். இவர் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் தொகுத்து வழங்கி வருகிறார்.
அதுமட்டுமின்றி சங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்திலும் நடித்து வருகிறார். இதை தொடர்ந்து எச். வினோத் இயக்கத்தில் KH 233 மற்றும் மணி ரத்னம் இயக்கத்தில் KH234 ஆகிய படங்களில் நடிக்கவுள்ளார்.
மருத்துவமனையில் அனுமதி
இந்நிலையில், இன்று ஹைதராபாத்தில் இருந்து சென்னைக்கு திரும்பிய கமல் ஹாசனுக்கு தீடீரென உடல்நல குறைவு ஏற்பட்டதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாராம்.
லேசான காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கமல்ஹாசன் சிகிச்சைக்கு பின் தற்போது வீடு திரும்பியுள்ளார்.
ஓரிரு நாட்கள் ஓய்வில் இருக்க வேண்டும் என்று கமல் ஹாசனுக்கு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளார்கள்.

தோண்ட தோண்ட தங்கம்; பல ஆண்டுகளுக்குப் பிரச்சினை இல்லை - மிக பெரிய சுரங்கம் கண்டுபிடிப்பு IBC Tamilnadu

கெட்டவார்த்தை பேசினால் அவனுக்கு பிடிக்காது; திட்டிய ஆசிரியர் - மாணவன் தற்கொலையால் கதறும் தாய்! IBC Tamilnadu
