பிக்பாஸ் 7வது சீசனிற்காக கமல்ஹாசனின் சம்பளம் இவ்வளவு பேசப்பட்டுள்ளதா?- இத்தனை கோடிகளா?
கமல்ஹாசன்
வெள்ளித்திரை, சின்னத்திரை, அரசியல் என மூன்றிலும் மிகவும் ஆக்டீவாக பயணித்து வருகிறார் கமல்ஹாசன். அதிலும் அவர் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் பெரிய ஆதரவு உள்ளது.
நிகழ்ச்சி ஒருபக்கம் என்றாலும் பொதுவான விஷயத்தை பதிவு செய்வார். கடந்த 6வது சீசனில் கூட ஒரு நல்ல விஷயத்தை கூறிவந்தார், புத்தகம் படிக்க வைப்பது தான்.
தான் இதுவரை படித்த சில அருமையான புத்தகங்கள் குறித்து அதை மக்களையும் படிக்க வைத்தார். அடுத்து வரப்போகும் புதிய சீசனில் அப்படி என்ன விஷயத்தை கொண்டு வரப்போகிறார் என்பது தெரியவில்லை.
சம்பளம்
ஒவ்வொரு சீசனிற்கும் பல கோடி சம்பளத்தை உயர்த்தி வரும் கமல்ஹாசன் இந்த 7வது சீசனிற்காக ரூ. 130 கோடிக்கு மேல் சம்பளம் பெறலாம் என கூறப்படுகிறது. கடந்த 6வது சீசனிற்காக கமல்ஹாசன் ரூ. 80 கோடி வரை சம்பளம் பெற்றதாக கூறப்பட்டது.
விரைவில் முடிவுக்கு வருகிறது சன் தொலைக்காட்சியின் சூப்பர் ஹிட் சீரியல்- ரசிகர்கள் வருத்தம்