கமல் ஹாசன் வீட்டின் விலை.. எவ்வளவு தெரியுமா
கமல் ஹாசன்
உலகநாயகன் கமல் ஹாசன் தற்போது பிசியாக பல படங்களில் கமிட்டாகியுள்ளார். விக்ரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து கலக்கி 2898 AD, தக் லைஃப், இந்தியன் 2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இதில் கல்கி 2898 AD வருகிற 27ஆம் தேதி திரைக்கு வருகிறது. இதை தொடர்ந்து அடுத்த மாதம் இந்தியன் 2 திரைப்படமும் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் நாயகன் திரைப்படத்திற்கு பின் 34 ஆண்டுகள் கழித்து மீண்டும் மணி ரத்னம் இயக்கத்தில் கமல் நடித்து வரும் திரைப்படம் தான் தக் லைஃப். இப்படத்தில் சிம்பு கமலுடன் இணைந்து முதல் முறையாக நடிக்கிறார்.
வீட்டின் விலை
கமல் ஹாசனின் சொத்து மதிப்பு குறித்து நாம் பார்த்திருக்கிறோம். ஆனால், அவருடைய வீட்டின் மதிப்பு பலருக்கும் தெரிந்திருக்காது. இந்த நிலையில் அவருடைய சொந்த வீட்டின் மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, சென்னையில் இருக்கும் கமலின் வீட்டு மதிப்பு ரூ. 20 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. இந்த தகவல் இணையத்தில் பேசப்பட்டு வருகிறது. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.