மறைந்த ராணி குயின் எலிசபெத்துடன் நடிகர் கமல்ஹாசன் எடுத்த புகைப்படம்- செம வைரல்
குயின் எலிசபெத் 2
இங்கிலாந்து ராணி 2ம் எலிசபெத் நேற்று மரணமடைந்தார். 96 வயதில் உயிரிழந்த ராணியின் கணவர் பிலிப் கடந்த ஆண்டு உடல்நலக் குறைவால் உயிரிழந்தார்.
பிலிப்-எலிசபெத் ராணிக்கு 3 மகன்கள் மற்றும் 1 மகள் உள்ளனர்.
ராணி உயிரிழந்ததையடுத்து அவரது மூத்த மகன் சார்லஸ் இங்கிலாந்தின் புதிய அரசராக பொறுப்பேற்றார். மரணமடைந்த ராணி 2-ம் எலிசபெத் இங்கிலாந்தை நீண்ட காலம் ஆட்சி செய்த நபர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

இந்தியாவில் ராணி
1997ம் ஆண்டு கமல்ஹாசனின் கனவுப் படமான மருதநாயகம் படத்தின் ஆரம்பம் நடந்தது. அந்த படத்தின் ஆரம்பத்திற்கு இங்கிலாந்து ராணி குயின் எலிசபெத் இந்தியா வந்திருந்தார்.
மருதநாயகம் படப்பிடிப்பில் அவர் 20 நிமிடங்களும் இருந்துள்ளார். அப்போது ராணியுடன் கமல்ஹாசன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

செம்பருத்தி சீரியல் புகழ் ஷபானாவின் புதிய சீரியல் ஹீரோ இவரா?- வெளிவந்த சூப்பர் அப்டேட்
பிரித்தானிய அரசியலையே மாற்றும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது... News Lankasri
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri