பிக்பாஸ் 7வது சீசனிற்காக நடிகர் கமல்ஹாசனுக்கு ரூ. 100 கோடிக்கு மேல் சம்பளமா?- மொத்தமாக இத்தனை கோடியா?
பிக்பாஸ்
விஜய் தொலைக்காட்சி ஏன் தமிழ் சின்னத்திரையில் படு பிரம்மாண்ட சில வருடங்களுக்கு முன் தொடங்கப்பட்ட ஒரு நிகழ்ச்சி தான் பிக்பாஸ்.
முதல் சீசன் என்ன என்று ஐடியா இல்லாமல் இருந்த மக்கள் இப்போது நிகழ்ச்சி குறித்து நன்றாக புரிந்துகொண்டுள்ளனர்.
ஆரம்ப நிகழ்ச்சிக்கு கிடைத்த வரவேற்பால் பிக்பாஸ் குழுவினர் அடுத்தடுத்து 6 சீசன்கள் வரை ஒளிபரப்பிவிட்டார்கள், இடையில் பிக்பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சியும் ஒளிபரப்பானது, அதற்கு நடிகர் சிம்பு தான் தொகுப்பாளராக இருந்தார்.
கமல்ஹாசன் சம்பளம்
தற்போது 7வது சீசன் விரைவில் தொடங்க இருக்கிறது, அதற்கான பேச்சுகளும் சமூக வலைதளங்களில் எழுந்துவிட்டது. போட்டியாளர்கள் இவர்கள் தான் என நிறைய லிஸ்ட் வலம் வருகிறது.
தற்போது இந்த 7வது சீசனை தொகுத்து வழங்க நடிகர் கமல்ஹாசனுக்கு ரூ. 130 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதைக் கேள்விப்பட்ட ரசிகர்கள் அட இத்தனை கோடியா ஒரு நிகழ்ச்சி நடத்த என்கின்றனர்.
எதிர்நீச்சல் சீரியல் புகழ் மாரிமுத்துவிற்கு தொடரில் நடிக்க இவ்வளவு சம்பளமா?- வெளிவந்த தகவல்