பிரம்மாண்டமாக உருவாகும் கல்கி 2 படத்திற்காக கமல்ஹாசன் வாங்கும் சம்பளம்... இத்தனை கோடியா?
கல்கி 2898
நாக் அஸ்வின் இயக்கத்தில் படு பிரம்மாண்டமாக தயாராகி வெளியான படம் கல்கி 2898 ஏடி.
பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோனே உள்ளிட்ட பலர் நடிக்க உருவான இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்தார்.
கடந்த 2024ம் ஆண்டு தெலுங்கு, தமிழ், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாக படம் ரூ. 1100 கோடிக்கும் அதிகமான வசூல் வேட்டை நடத்தியிருந்தது.

முதல் பாகத்தில் சுமதி கதாபாத்திரத்தில் தீபிகா படுகோனே நடித்தார், ஆனால் அவர் 2ம் பாகத்தில் இருந்து வெளியேறியிருக்கிறார். அவருக்கு பதில் வேறு யார் நடிக்கப்போகிறார் என இன்னும் அதிகாரப்பூர்வமாக தெரியவில்லை.
கமல்ஹாசன்
தற்போது கல்கி 2898 ஏடி படத்தின் 2ம் பாக படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. கமல்ஹாசன் மற்றும் அமிதாப் பச்சன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.
2ம் பாகத்தில் அமிதாப் பச்சனின் புகைப்படங்கள் சமீபத்தில் சமூக வலைதளங்களில் வெளியாகின. கமல்ஹாசன் சுப்ரீம் யாஸ்கின் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

முதல் பாகத்தை போல 2ம் பாகத்திலும் சர்ப்ரைஸ் காத்திருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது, அடுத்த ஆண்டு படம் திரைக்கு வர உள்ளது. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் கமல்ஹாசனுக்கு ரூ. 150 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நடுவீட்டில் பெண்ணின் புடவையை அவிழ்ந்து அரங்கேறிய கொடூரம்! கணவரிடம் தொகுப்பாளர் கேட்ட கேள்வி Manithan
இராணுவத் தளங்களை மூடுக... வெளிநாட்டில் பிரித்தானியாவிற்கு எதிராக வெடித்த மக்கள் போராட்டம் News Lankasri
ஈரானுக்குள் புகுந்து யுரேனியம் கையிருப்பை கைப்பற்ற திட்டம்: அதிரடிப்படையை களமிறக்கும் அமெரிக்கா News Lankasri