4 நாள் முடிவில் கமல்ஹாசனின் விக்ரம் தமிழகத்தில் செய்த வசூல்- நேற்று மட்டும் இவ்வளவு கலெக்ஷனா?
கடந்த ஜுன் 3 ம் தேதி உலகம் முழுவதும் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான திரைப்படம் விக்ரம். இப்படத்தில் அவரைத் தாண்டி ஃபகத் பாசில், விஜய் சேதுபதி, சூர்யா என பலர் உள்ளார்கள்.
ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்க அனிருத் இசையமைத்திருக்கும் இப்பட பாடல்கள் அனைத்துமே செம ஹிட்.
தற்போது படம் வசூலிலும் நல்ல வேட்டை நடத்தி வருகிறது, பட கதையை தாண்டி கமல்ஹாசனும் நல்ல புரொமோஷன் செய்தார்.
பட வசூல்
விரைவில் தமிழகத்தில் மட்டுமே ரூ. 100 கோடி வசூலை எட்ட இருக்கும் விக்ரம் தற்போது 4 நாள் முடிவில் மட்டும் ரூ. 77 கோடி வரை வசூலித்துள்ளது.
அதிலும் வேலை நாட்களான நேற்று திங்கட்கிழமை மட்டுமே படம் ரூ. 10 கோடி வரை வசூலித்திருப்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது.
நீண்ட இடைவேளைக்கு பிறகு கமல்ஹாசனின் படம் வசூல் வேட்டை நடத்த ரசிகர்கள் படு குஷியில் உள்ளார்கள்.
மகேஷ் பாபுவுடன் ஒன்றாக இணைந்து நடித்துள்ள சன் டிவி சீரியல் நடிகை.. யாருனு நீங்களே பாருங்க