தமிழ் சினிமா பார்க்காத இரண்டு பிரம்மாண்ட சாதனைகள் ! நடிகர் கமலால் மட்டுமே சாத்தியம்..
விக்ரம்
உலகநாயகன் கமல் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் விக்ரம், பெரிய எதிர்பார்பிற்கு இடையே கடந்த ஜுன் 3 ஆம் தேதி வெளியான இப்படம் உலகம் முழ்ழுவதும் வசூல் சாதனைகளை நிகழ்த்தி வருகிறது.
தமிழ் சினிமாவின் இனி கமல் திரைப்படங்கள் வசூல் சாதனைகளை நிகழ்த்தாது என சொல்லப்பட்டு வந்த நிலையில் விக்ரம் திரைப்படம் வெளியாகி இதுவரை தமிழ் சினிமா பார்க்காத வசூல் சாதனைகளை நிகழ்த்தி வருகிறது.
அதன்படி கமல் இதேபோன்ற வரலாறு காணாத சாதனைகளை இரண்டு முறை படைத்திருக்கிறார் என்பது எத்தனை பேருக்கு தெரியும். ஆம், கடந்த 1989 ஆம் ஆண்டு கமல் நடிப்பில் வெளியான திரைப்படம் அபூர்வ சகோதரர்கள்.
வரலாறு காணாத சாதனைகள்
இப்படம் அப்போது தமிழகத்தில் வெளியான எந்த ஒரு திரைப்படம் செய்யாத டிக்கெட் விற்பனை அபூர்வ சகோதரர்கள் திரைப்படத்திற்கு நடந்துள்ளது. சிவாஜியின் திரிசூலம் திரைப்படத்திற்கு பின் அதிக மக்கள் கூட்டம் திரண்டது கமலின் அபூர்வ சகோதரர்கள் திரைப்படத்திற்கு தான்.
அதனை தொடர்ந்து தற்போது தமிழகத்தில் அதிக வசூல் செய்த திரைப்படமாக கடந்த வருடங்களாக பாகுபலி திரைப்படம் தான் No.1 இடத்தில் இருந்து வந்தது, அதனை சமீபத்தில் வெளியான கமலின் விக்ரம் திரைப்படம் தான் முறியடித்துள்ளது.
அதன்படி விக்ரம் திரைப்படம் தமிழகத்தில் மட்டும் ரூ.170 கோடிக்கும் மேல் வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. இதன்முலம் தற்போது கமலின் விக்ரம் திரைப்படம் தான் No.1 இடத்தில் உள்ளது.
ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய நடிகர் மாதவன் ! நேரில் கண்ட சூர்யா கொடுத்த ரியாக்ஷன்