கமல் பேச்சால் வந்த சர்ச்சை.. தக் லைப் பேனர்கள் கிழிப்பு
நடிகர் கமல்ஹாசன் தற்போது தக் லைப் பட ப்ரோமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் அந்த படத்தின் விழாவில் பேசிய கமல் "தமிழில் இருந்து தான் கன்னடம் பிறந்தது" என கூறினார்.
நடிகர் சிவராஜ்குமாரும் அதை ஏற்றுக்கொள்வதுபோல தலையசைத்தார்.
கமல் இப்படி பேசியதற்கு கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தொடங்கி பலரும் கமலுக்கு கண்டனம் தெரிவித்து இருக்கின்றனர்.
மறுபுறம் கமல் சொன்னது உண்மை தான் என தமிழக அரசியலில் இருப்பவர்களும் பேச தொடங்கி இருப்பதால் இது சர்ச்சையாக மாறி இருக்கிறது.
பேனர் கிழிப்பு
இந்நிலையில் கமல்ஹாசனின் தக் லைப் பட பேனர் கர்நாடகாவில் கிழிக்கப்பட்டு போராட்டம் நடைபெற்று இருக்கிறது.
ஜூன் 5ம் தேதி படம் ரிலீஸ் ஆகும் நிலையில் கர்நாடகாவில் அந்த படத்தின் ரிலீசுக்கு எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.

பாகிஸ்தான், சீனா, வங்கதேசத்திற்கு மோசமான செய்தி - இந்தியாவிற்கு R-37M ஏவுகணையை வழங்கும் ரஷ்யா News Lankasri

துருக்கியுடன் உறவுகளை இந்தியா துண்டித்தால்... இந்தப் பொருட்களின் விலை ராக்கெட் வேகத்தில் உயரும் News Lankasri
