கமலின் 233-வது திரைப்படத்தின் இயக்குநர் இவர் தான்! மணிரத்னத்தை தொடர்ந்து மற்றுமொரு எதிர்பார்க்காத கூட்டணி
கமல்ஹாசன்
உலகநாயகன் கமல்ஹாசன் தற்போது இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
பிரம்மாண்டமாக உருவாகி வரும் அப்படத்தை தொடர்ந்து கமல் அடுத்தடுத்து அவரின் முக்கிய திரைப்படங்கள் உருவாக இருக்கின்றன.
அதன்படி சமீபத்தில் தான் கமல் - மணிரத்னம் கூட்டணியில் 234-வது திரைப்படம் உருவாக இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்து இருந்தனர்.
ஆனால் அப்போதே கமல் - எச்.வினோத் கூட்டணியின் அறிவிப்பு தான் வர இருப்பதாக சொல்லப்பட்டது. இதற்கிடையே தற்போது மீண்டும் கமல் - எச்.வினோத் கூட்டணி திரைப்படத்தின் தகவல்கள் பரவி வருகின்றன.
அதன்படி 233-வது திரைப்படத்திற்காக அந்த கூட்டணி அமைய இருப்பதாகவும், 234-வது திரைப்படத்திற்கு முன்பே இப்படத்தை மிக குறுகிய நாட்களில் முடிக்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
யுவன் ஷங்கர் ராஜா ஒரு Fraud - அதிர்ச்சியளிக்கும் லவ் டுடே பிரதீப்-ம் பேஸ்புக் பதிவு

இந்தியாவிற்கு சிக்கலை ஏற்படுத்தும் நகர்வு... வங்கதேசத்தில் ஆயுதங்களை தயாரிக்க துருக்கி முடிவு News Lankasri
