மெகா ஹிட்டான ஷங்கரின் ஜென்டில்மேன் திரைப்படத்தை நிராகரித்த கமல்ஹாசன்! எதற்காக தெரியுமா
ஜென்டில்மேன்
இயக்குநர் ஷங்கர் தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநராக திகழ்ந்து வருபவர், தொடர்ந்து பிரம்மாண்ட திரைப்படங்களை கொடுத்து வரும் ஷங்கர் தற்போது தெலுங்கு நடிகர் ராம் சரணை வைத்து RC15 திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
மேலும் ஷங்கர் ஜென்டில்மேன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானது அனைவரும் அறிந்த விஷயம்.
கடந்த 1993 ஆம் ஆண்டு வெளியான இப்படத்தில் நடிகர் அர்ஜூன், கவுண்டமணி, மதுபாலா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருப்பார்கள். அந்தாண்டு வெளியான இந்திய திரைப்படங்களிலே அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்டு இப்படம் மிக பெரிய வெற்றியடைந்தது.
நிராகரித்த கமல்
அப்படியான இப்படத்தின் கதையை ஷங்கர் முதலில் நடிகர் கமல்ஹாசனிடம் தான் கூறியுள்ளார். இது குறித்து பழைய பேட்டியில் பேசியுள்ள கமல் “ஷங்கர் இயக்கிய ஜென்டில்மேன் படத்தின் அரம்ப கதையை முதலில் என்னிடம் தான் கூறினார்.
இப்போது வேறொரு கதையாக இருக்கிறது, அரம்பத்தில் அவர் சொன்ன கதையில் ஒரு பார்ப்பனர் பிள்ளையின் militancy (போர்க்குணம்) பற்றின கதையாக இருந்தது. எனக்கு அதில் விருப்பம் இல்லை, என சொல்லி ஒதுங்கிவிட்டேன்” என பேசியுள்ளார்.
கதை திருட்டில் சிக்கிய விருமன்